தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சன்ன ரகப் பொன்னி அரிசி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி...

Udhay Vijay

உதயநிதி ஸ்டாலின், ஜோசப் விஜய் - TNDIPR

Published On :24 அக்டோபர் 2026, 9:01 pm IST

சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் முதல்வர் சொன்ன மாற்றமா?

அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.

அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.

கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA.

தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?

என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Opposition Leader Udhayanidhi Stalin has raised the question: 'When did the government float a tender to procure fine Ponni rice?'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.