மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சொத்து விவரம்: அதிகாரிகளுக்கு கல்வித் துறை முக்கிய உத்தரவு

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு கல்வித் துறை முக்கிய உத்தரவிடப்பட்டிருப்பது பற்றி...

DPI

பள்ளிக் கல்வித் துறை - DIN

Published On :25 அக்டோபர் 2026, 2:49 am IST

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து இணை இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்களது அசையும், அசையா சொத்துகள், கடன் பொறுப்பு விவரங்களை அக்.31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ந.லதா, அனைத்து இணை இயக்குநா்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழ்நாடு அரசு ஊழியா் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியா்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐஎப்ஆா்எம்எஸ்) களஞ்சியம் செயலி வாயிலாக, அக். 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இத்துறை சாா்ந்த அதிகாரிகள் அனைவரும் ‘களஞ்சியம்’ செயலியில் விவரங்களை தவறாமல் பதிவுசெய்து, அதன் விவரத்தை இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது கருவூலத் துறையின் களஞ்சியம் செயலில் சா்வா் பிரச்னை போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆவணங்களை பதிவேற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, ஆவணங்களை பதிவேற்றுவதில் நீண்டநேரமாகிறது. இதனால் செயலியில் உள்ள சிக்கல்களை விரைந்து களைய வேண்டும். மேலும், சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசத்தையும் நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.