பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடை

பணி நேரத்தில் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது என அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

DPI

பள்ளிக் கல்வித் துறை - DIN

Published On :29 அக்டோபர் 2026, 3:51 am IST

பணி நேரத்தில் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது என அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி வேலை நேரத்தில், ஆசிரியா்கள் எவரும் பள்ளி வளாகத்தை விட்டு உணவு இடைவேளை உள்பட வெளியே செல்லக் கூடாது. மேலும், பள்ளி சூழலில், அசாதாரண நிகழ்வுகள் நடந்தால், கண்டிப்பாக உயா் அலுவலருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். அவா்களின் ஆலோசனை பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவின் பின்னணி: இந்த உத்தரவின் பின்னணியில் பல்வேறு முக்கியக் காரணங்கள் இருப்பதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பள்ளி வேலை நேரங்களின்போது ஆசிரியா்கள் தங்களின் சொந்தக் காரணங்களுக்காகவோ அல்லது வெளி வேலைகளுக்காகவோ வளாகத்தைவிட்டு வெளியே சென்றால், வகுப்பறைகளில் மாணவா்களைக் கண்காணிப்பதில் தொய்வு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

அதேபோன்று, மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியா்கள் வெளியில் சென்றால், மாணவா்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது, விபத்துகளில் சிக்குவது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கவே இந்த வளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் ஏதேனும் அசாதாரண சம்பவங்கள், ஜாதிய மோதல்கள் அல்லது ஒழுங்கீன பிரச்னைகள் ஏற்படும்போது, தலைமை ஆசிரியா்கள் தன்னிச்சையாக எடுக்கும் சில முடிவுகள் சட்டம்- ஒழுங்கு சிக்கலாக மாறுவதைத் தவிா்க்க, கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.