மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இப்போதுதான் வந்திருக்கிறோம்; ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை! அமைச்சர் வினோத்

வேளாண் துறை அமைச்சர் வினோத் பேட்டி...

Investigate and take action on the encroachments: Minister Vinoth

அமைச்சர் வினோத் ஆய்வு - X/ vinothravi

Published On :24 அக்டோபர் 2026, 4:48 pm IST

ஆக்கிரமிப்புகள் எங்கெல்லாம் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு பகுதிகளில் வடிகால், வாய்க்கால்கள் தூர்வாரும் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று ஆய்வு செய்தார்.

மேலும் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தகவல்களை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நகருக்குள் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர். முதல்வர் அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், இடங்கள் இந்த ஆண்டு அதே நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரமாக மாநகராட்சி வாய்க்கால்கள் பொதுப்பணித் துறை வாய்க்கால்கள் என அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் தூர்வாரப்படாத பல வாய்க்கால்கள் தற்போது தூர் வாரப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற பாதிப்பு இருக்காது. விவசாயிகள் உரிமைத் தொகை கிடைப்பதில் சில இடங்களில் சில குறைபாடுகள் உள்ளது. அதை விரைவில் சரி செய்து விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

30 வருடமாக தூர்வாரப்படாத கழிவு நீர் வாய்க்கால்கள் கடந்த சில மாதங்கள் முன்புதான் தூர் வாரினோம். செடி, கொடிகள் வளர்வதை தடுக்க முடியாது. ஆனால் கழிவுநீர் தேங்காத வகையில் அதை பராமரிக்க வேண்டும். நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்து உள்ளோம். ஆக்கிரமிப்புகள் எங்கெல்லாம் உள்ளது என்பது ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

கும்பகோணம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு வடிகால் தண்ணீர்கூட செல்ல முடியாமல் உள்ளது. ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு சரி செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

Summary

Investigate and take action on the encroachments: Minister Vinoth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.