மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா? செல்லூர் ராஜூ கேள்வி

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

DMK councillor, meeting organiser booked over slur against TN CM Vijay

முதல்வர் விஜய்

Published On :24 அக்டோபர் 2026, 12:17 pm IST

தீயை கொளுத்தி போட்டது போல அரசு ஊழியர்கள் கருத்து சொல்லக்கூடாது என கூறுவது, கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா? என்ற கேள்வியை எழுப்புவதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறோம்; மருது சகோதரர்களின் நினைவு தினத்தில் உறுதியேற்று கட்சியை வளர்ச்சியோடு கொண்டு செல்வோம்.

சுகாதாரத் துறையில் சமூக வலைத்தளங்கள் பொதுக்கூட்டங்களில் அரசுக்கு எதிராக கருத்து பதிவிடுவதற்கு எதிரான சுற்றறிக்கை தொடர்பான கேள்விக்கு? இது ஜனநாயக நாடு, ஏற்கெனவே தவெகவின் தற்காலிக வெற்றியால் தற்குறி அரசாக மாறியிருக்கிறது.

எப்போதுமே ஜனநாயகத்திற்கு ஏதாவது ஒன்று என்றால் தாங்கள் வழிநடத்தபோவதாக சொல்வார்கள், நாட்டில் புதுமையை உருவாக்கப் போகிறோம், புது வளர்ச்சியை உருவாக்கப் போகிறோம், அனைவருக்கும் சுதந்திரம் என சொல்வார்கள், தவெகவின் தலைவரே அப்படிதான் பேசினார்.

கட்சி தொடங்கும் போது கூறினார், திராவிட இயக்கங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடு பாழாகி போனது என கூறுகிறார்கள், திராவிட இயக்கங்களின் ஆட்சியில் செய்த சிறப்பான சாதனையைதான் அவர் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது, அதை பின்பற்றி செல்ல வேண்டியுள்ளது. இதுவரைக்கும் புதுமையாக எதுவும் செய்யவில்லை.

இதில் தீயை கொளுத்தி போட்டது போல அரசு ஊழியர்கள் கருத்து சொல்லக்கூடாது என கூறுவது கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய சர்வாதிகாரியாக முதலமைச்சர் விஜய் மாறிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாட்டில் ஏறி இருக்கக்கூடிய விலைவாசி, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, மது போதை தாராளமாக நடைபெறுகிறது. இதையெல்லாம் இந்த அரசு 6 மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

சிங்கப்பெண் என சொல்லிக்கொண்டு ஒரு படை அமைத்தார்கள். இரண்டு பெண் சிறுமிகள் காணாமல் போய் குடும்பமே மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பெண்கள் என்ன செய்கிறார்கள்?

நிர்வாகத்தை ஒழுங்காக செயல்படுத்தி என்ன மாற்றத்தை கொண்டு வரலாம் என சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

காவிரி நீர் பிரச்சனையில் எந்த ஒரு கவனமும் செலுத்தாத முதலமைச்சராக விஜய் இருக்கிறார். இங்கே காவேரி பிரச்சனையை தீர்க்காமல் ஆந்திரத்துக்கு செல்கிறார். எதற்காக சென்றார் என்ன என்பது தெரியவில்லை. இங்கு உள்ள காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகப்பெரிய துன்பத்தில் துயரத்திலும் இருக்கிறார்கள், இரண்டு போகம் சம்பாவும் குருவையும் அவர்களை ஏமாற்றி விட்டது.

மழையால் எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆனந்த் கூறியது தொடர்பான கேள்விக்கு, அவர வரச் சொல்லி பார்க்க சொல்லுங்க, கோட்டையிலிருந்து அமைச்சர்கள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள், மக்கள் இங்கு என்ன துன்பப்படுகிறார்கள் துயரப்படுகிறார்கள் என தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் செல்லூர் ராஜூ.

Summary

Has Chief Minister Vijay turned into an autocrat who suppresses freedom of expression? Sellur Raju asks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.