தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உள்பட அனைவரும் முயற்சித்தோம்: டிடிவி தினகரன்

விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயற்சித்ததாக டிடிவி தினகரன் கூறியது குறித்து...

Edappadi Palaniswami | Thirumavalavan | TTV Dhinakaran

எடப்பாடி பழனிசாமி | திருமாவளவன் | டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 3:16 pm IST

விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுடன் டிடிவி தினகரன் பேசியதாவது, "அமமுக எம்எல்ஏ-க்களை திருடி, அதிமுகவில் 25 பேரை சாலையில் நிறுத்தி, திமுக கூட்டனியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஆசை காட்டிதான் இந்த தவெக ஆட்சி அமைத்தார்கள்.

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஆசை காட்டி, அவர்களை ராஜிநாமா செய்யவைத்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்ததை மறைப்பதற்காகவே திமுக - அதிமுக ஒன்றிணையப் போவதாக தவெகவினர் சொல்கின்றனர். ஆனால், அதுபோன்ற முயற்சியே கிடையாது.

தவெகவுக்கு விசிகவோ கம்யூனிஸ்டுகளோ ஆதரவளிக்கவில்லையெனில், விஜய்யால் ஆட்சியமைத்திருக்க முடியாது. அந்த நேரத்தில் திமுக ஆட்சியமைக்க முயற்சிக்க மாட்டோம் என மு.க. ஸ்டாலின் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். இருப்பினும், ஆட்சியமைக்க திமுகவிடம் அதிமுக ஆதரவு கேட்கவில்லை.

அதே சமயத்தில் அதிமுக ஆட்சியமைக்க ஆதரவளிக்குமாறு தவெகவிடம் கோரலாம் என்றுதான் நான் கூறினேன். ஆனால், அதிமுகவை ஆதரித்தால், அது பாஜகவை ஆதரிப்பது போன்றது என கம்யூனிஸ்டுகள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, திருமாவளவனை முதல்வராக்க எடப்பாடி பழனிசாமி உள்பட நாங்கள் அனைவரும் முயற்சி செய்தோம். எம்எல்ஏ-க்களை தவெக திருடுவதைத் தடுப்பதற்காக தவெகவிடமே ஆதரவு கோரினோம்.

எந்தக் காலத்திலும் திமுகவுடன் அதிமுக போக முடியாது. திமுகவும் அதிமுகவுடன் கூட்டு சேரவே முடியாது. இதுதான் உண்மை.

கடந்த (திமுக) ஆட்சியைவிட இந்த (தவெக) ஆட்சி எந்த விதத்திலாவது சிறந்தது எனக் கூற முடியுமா? கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சி மிக மோசமானதாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சி கொடிய மனத்துடனும் வன்மத்துடனும் வக்கிரத்தோடு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை நசுக்கப் பார்க்கின்றனர்" என்று தெரிவித்தார்.

Summary

ADMK Secretary Edappadi Palaniswami tried to make VCK Chief Thirumavalavan the Chief Minister, says TTV Dhinakaran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.