பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறைக் கைதிகள் தப்பியோடுவது தவெக ஆட்சியில் சர்வசாதாரணமாகி வருகிறது: டிடிவி தினகரன்

சிறைக் கைதிகள் தப்பியோடுவது தவெக ஆட்சியில் சர்வசாதாரணமாகி வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்திருப்பது பற்றி...

Prisoners escaping from custody is becoming a common occurrence under the TVK administration: TTV Dhinakaran

டிடிவி தினகரன்

Published On :31 அக்டோபர் 2026, 9:54 pm IST

சிறைக் கைதிகள் தப்பியோடுவது தவெக ஆட்சியில் சர்வசாதாரணமாகி வருகிறது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கோவை மத்திய சிறை வளாகத்திலிருந்து ஒரு விசாரணைக் கைதி, சென்னை கொளத்தூரில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் என முதல்வர் சிறைத்துறைக்கு "கிடிக்குப்பிடி" உத்தரவு விடுத்த அடுத்த கணமே அடுத்தடுத்த கைதிகள் காவல் பாதுகாப்பிலிருந்து தப்பித்துள்ளனர்.

தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே சென்னை புழல், சேலம், தேனி என இதுவரை 50-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பியிருப்பதாக சொல்லப்படுவது, தவெக ஆட்சியில் சிறைத்துறை நிர்வாகம் சின்னாபின்னமாகியுள்ளதையே காட்டுகிறது.

குற்றவாளிகள் சிறைகளிலிருந்து தப்பிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், சிறைத்துறையில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்த பிறகும், அவற்றைச் சரிசெய்வதற்கு எந்தவொரு முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல் அலட்சியத்துடன் தவெக அரசு செயல்பட்டதே இச்சம்பவங்களுக்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சிறைக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறைத்துறை சீரமைக்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவு வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே பாதுகாப்பு அரணிலிருந்த கைதிகள் தப்பியிருப்பது, முதல்வரின் கீழ் இயங்கும் காவல்துறையையும், "வாய்ச்சவடால் வீராசாமி" எனப் பெயரெடுத்துள்ள சிறைத்துறை அமைச்சரையும் யாரும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது.

எனவே, சிறைத்துறையின் மேம்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சம்பிரதாயத்திற்காகவும் "பரிகாரத்திற்காகவும்" சிறைச்சாலைகளை ஆய்வு செய்வதைத் தவிர்த்து, முறையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவை அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

AMMK leader TTV Dhinakaran criticized the TVK administration, stating that recurring jailbreaks highlight severe law-and-order and administrative lapses.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.