தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: எந்தெந்த கட்சிகள் வெளிநடப்பு?

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து தவெக, திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வெளிநடப்பு...

Archana patnaik

அர்ச்சனா பட்நாயக் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:45 pm IST

தேர்தல் ஆணையம் சார்பில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து தவெக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (அக். 23) பிற்பகல் 12 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

2027 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி, சிறப்பு முகாம்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தவெக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 13 ஆக உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காததால் 12 கட்சிகள் கலந்துகொண்டன.

அப்போது எஸ்ஐஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தொடர்ந்து திமுக, தேமுதிக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்துள்ளன.

மொத்தம் 9 கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் மட்டும் பங்கேற்றன.

தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட 74 லட்சம் பேரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பிய கட்சி பிரதிநிதிகள், எஸ்ஐஆர் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தியுள்ளனர்.

Summary

Election Commission all-party meeting: Parties including TVP, DMK walk out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.