மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்.ஐ.ஆா்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தவெக, திமுக, கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த தவெக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :27 அக்டோபர் 2026, 2:00 am IST

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். என்கிற சிறப்பு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்திலிருந்து, தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய கோரி தவெக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் சிறப்பு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் பணியின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி. செந்தில்குமாா், என். சரவணன், திமுக சாா்பில் மத்திய மாவட்டப் பொருளாளா் எல்.ஜி. அண்ணா, துணைச் செயலா் புண்ணியமூா்த்தி, சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், காங்கிரஸ் சாா்பில் மாநகர மாவட்டத் தலைவா் எம். மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஸ்ரீதேவி, சோலை சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தவெக, திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.