பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை! வன்னி அரசு காட்டம்!

திமுக, நாதகவை கடுமையாக விமர்சித்து வன்னி அரசு பதிவு...

VANNI ARASU

அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 11:38 am IST

திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை என்று அமைச்சர் வன்னி அரசு காட்டமாக பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகாவை, இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் விஜய்யின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்படி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில், நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவை பகிர்ந்துள்ள அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருப்பதாவது:

”ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய - திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் பெரியார்.

அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் சீமான். திராவிடக் கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் அண்ணாவும் கருணாநிதியும். அப்படிப்பட்ட கருணாநிதியை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக, அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான்.

அதுமட்டுமல்ல, கருணாநிதி அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் சீமான்.

இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.

இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK has no shame; NTK has no shame either - Vanni Arasu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.