தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்

நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்திருப்பது குறித்து...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 10:20 pm IST

நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை (அக். 21) நன்றி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வரும் கார்த்திகா, அண்மையில் நடைபெற்ற தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார்.

இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் தமிழக காவல் துறையினரால் புதன்கிழமை (அக். 21) கைது செய்யப்பட்டனர்.

கார்த்திகாவை கைது செய்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர்களான மு.க. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, எடப்படி பழனிசாமி, அன்புமணி, தமிழிசை, நயினார் நாகேந்திரன், பிரேமலதா, டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை போன்றவர்கள் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய அனைவருக்கும் நன்றி என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு சீமான் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Party coordinator Seeman on Wednesday (Oct. 21) thanked opposition leaders who condemned the arrest of NA candidate Karthika.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.