மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!

நாதக வேட்பாளர் கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

Premalatha

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 3:58 pm IST

நாதக வேட்பாளர் கார்த்திகா கைதுக்கு தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக். 20) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எம். கார்த்திகாவை அதிகாலை 5.30 மணியளவில், அவர் இரவு உடையான நைட்டியில் இருந்தபோது, உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் வழங்காமல் காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டதற்காக, ஒரு பெண்ணை அதிகாலை நேரத்தில் இத்தகைய முறையில் கைது செய்வதுதான் தீர்வா என்பதைத் தமிழக அரசும் ஆளுங்கட்சியினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் என்றுகூடப் பாராமல், உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

"மாற்றம், மாற்றம்" என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? ப

ழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்துள்ளன. எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, எம். கார்த்திகாவை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

Summary

DMDK General Secretary and MLA Premalatha Vijayakanth has condemned the arrest of Nathaka candidate Karthika.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.