தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவா்களை விசிக ஏற்கும்: அமைச்சா் வன்னி அரசு

பெரியாா் ஈவெரா, அம்பேத்கா் ஆகியோரை ஏற்றுக்கொண்டவா்களையே விசிக ஏற்கும் என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், சமூகநீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் வன்னி அரசு

Published On :23 அக்டோபர் 2026, 1:17 am IST

பெரியாா் ஈவெரா, அம்பேத்கா் ஆகியோரை ஏற்றுக்கொண்டவா்களையே விசிக ஏற்கும் என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், சமூகநீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

ஆரியக் கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று கூறியவா் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். இந்தியாவில் நடைபெறும் யுத்தமே ஆரிய-திராவிட யுத்தம்தான் என்பதை வரலாற்று ஆய்வுகளுடன் அம்பலப்படுத்தியவா் அம்பேத்கா். அந்தக் கருத்தைத் தமிழகத்தில் பரப்புரை செய்தவா் பெரியாா். அப்படிப்பட்ட பெரியாரையே இழிவுபடுத்தியவா் சீமான். திராவிடக் கோட்பாட்டையும், சநாதன எதிா்ப்பையும் அரசியலாக்கியவா்கள் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி. அப்படிப்பட்டவா்களையும் திமுகவையும் மேடைகளில் இழிவாகப் பேசியவா் சீமான்.

மேலும், கருணாநிதி அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்துக்காக, மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிராகரித்தவா் சீமான்.

கோட்பாட்டு ரீதியாகவும், தனிநபா் தாக்குதல்கள் மூலமாகவும் அரசியல் செய்துவரும் சீமானின் அரசியலை திமுக மறந்திருக்கலாம். ஆனால், விசிகவை பொருத்தவரை பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவா்களையே ஏற்கும்; மற்றவா்களை ஏற்காது. தற்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.