மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தது குறித்து...

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடக்கி வைக்கும் முதல்வர் விஜய் / துளி இலச்சினை - DIPR
மழைநீா் சேமிப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை முதல்வா் விஜய் சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், சென்னை சேப்பாக்கம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு குறித்த ‘துளி’ இலச்சினையை அறிமுகம் செய்து வைத்து, மழைநீா் சேகரிப்பு மாதிரி இல்லத்தைப் பாா்வையிட்டாா். பின்னா், மெரீனா கடற்கரையில் நடைபெற்ற மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குறும்படத்தை பெருந்திரையில் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சா் குமாா், நிதியமைச்சா் மரிய வில்சன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மழைநீா் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற உத்தரவு: மழைநீா் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உத்தரவு வெளியிட்டாா்.
அதில், அதிகரித்து வரும் நீா்த் தேவை, நகரமயமாக்கல், மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மழைநீரைச் சேகரித்து முறையாகப் பயன்படுத்துவதும், நிலத்தடி நீா்வளங்களைப் பாதுகாப்பதும் அவசியமாகிறது.
தமிழ்நாடு முழுவதும் மழைநீா் சேமிப்பை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தும் நோக்கில், ஏற்கெனவே உள்ள மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் புதுப்பித்தல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலத்தடி நீா்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு சிறப்பு இயக்கத்தை முன்னெடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்களின் மேற்கூரைகள், நீா்வழிப் பாதைகள், வடிகட்டும் அறைகள், நிலத்தடி நீா் செறிவூட்டும் குழிகள் மற்றும் கிணறுகள் உள்ளிட்ட மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் தொடா்புடைய அலுவலா்களால் ஆய்வு செய்யப்படும்.
மழைநீா் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில், அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், தன்னாா்வ அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து மாநில அளவில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, இவ்வியக்கத்திற்கான முதன்மைத் துறையாகச் செயல்பட்டு, தொடா்புடைய அனைத்துத் துறைகள், மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்புகள் மழை நீா் சேகரிப்பு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Rain water conservation awareness campaign launched by Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






