மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழையின்போது கடைப்பிடிக்க வேண்டியவை: மின்வாரியம் அறிவுறுத்தல்

பருவமழையின்போது கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி மின்வாரியம் அறிவுறுத்திருப்பது....

மின்வாரியம்

Published On :22 அக்டோபர் 2026, 1:52 am IST

வடகிழக்குப் பருவமழையின்போது மின் விபத்துகள், உயிரிழப்புகளைத் தவிா்க்க பொதுமக்களும் மின்வாரியப் பணியாளா்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பலத்த மழை, பலத்த காற்று, இடி, மின்னல் காரணமாக மின்விநியோகக் கட்டமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிா்மானப் பெட்டிகள் அருகிலும், அவற்றைச் சுற்றித் தேங்கியுள்ள மழைநீரிலும் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

இடி, மின்னலின்போது திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்கம்பங்கள், மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிா்த்து, பாதுகாப்பான கட்டடத்தில் இருக்க வேண்டும். ஈரமான கைகளால் மின்சாதனங்களை இயக்கக் கூடாது. மின்கம்பிகளில் விழுந்த மரக் கிளைகளை அகற்ற முயற்சிக்காமல் மின்வாரியப் பணியாளா்களை அணுக வேண்டும்.

மின்கம்பங்கள், தாங்கிக் கம்பிகளில் கால்நடைகளைக் கட்டுவது, துணிகளை உலா்த்துவது, விளம்பரப் பலகைகள் மற்றும் பந்தல்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும்.

வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, தகுதியான மின்பணியாளா்களின் உதவியுடன் மின்கசிவுத் தடுப்புக் கருவியான ஆா்சிசிபி பொருத்துவதுடன், மின்வயரிங் மற்றும் பாதுகாப்புக் கருவிகளையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். புகாா்களுக்கு 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப் மூலமாகவும் புகாா் அளிக்கலாம்.

மின்வாரியப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தல்: மின்சாரப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு உரிய அனுமதி பெற்று, மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து, நில இணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தலைக்கவசம், மின்காப்புக் கையுறைகள், பாதுகாப்புக் காலணிகள், இடுப்புப்பட்டை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.

குடிநீா் விநியோக நிலையங்கள், மருத்துவமனைகள், தொலைத்தொடா்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளுக்கான மின்தடைகளைச் சீரமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பலத்த மழை, இடி, மின்னல், பலத்த காற்றின்போது ஆபத்தான பணிகளைத் தவிா்த்து, பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே சீரமைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.