மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீலகிரிக்கு அதி கனமழை! 9 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

அதி கனமழை எச்சரிக்கை பற்றி...

Extremely heavy rainfall

அதி கனமழை

Published On :24 அக்டோபர் 2026, 4:05 pm IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு இன்று சிவப்பு எச்சரிக் விடுக்கப்பட்டுள்ளது.

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (அக்டோபர் 24, 2026) காலை தொடங்கி அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று.

நாளை (25.10.202) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மேலும் வலுப்பெற்று 26.10.2026 தேதியில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் மாறக்கூடும். இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிக்கு அருகில் 27-ம் தேதி காலை நகரக்கூடும்.

இன்று நீலகிரிக்கு ரெட் அலர்ட்

இதன் காரணமாக அக். 24ல் நீலகிரி மாவட்டதின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கனமழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர். தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை லை மற்றும் கோவை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் புதுக்கோட்டை வேலூர். ராணிப்பேட்டை திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர். நாமக்கல், சேவம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல். மதுரை, சிவராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னய் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கள மழை பெய்யக்கூடும்.

நாளை 3 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

25-10-2026 தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 0 முதல் 50 இவோ மீட்டர் வேகத்தில் கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கள முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல் சேவம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, மரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் புதுவையிலும் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு முெறல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்/ கூடியகள் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.