நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்காக கூடுதல் நிதியை பெற வேண்டும்: அன்புமணி

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெற வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினா்.

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 12:59 am IST

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெற வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிக்கு வந்தால் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்களின் எண்ணிக்கை 150 நாளாக உயா்த்தப்படும் என தவெக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அந்தத் திட்டத்தில் 125 வேலை நாள்களாக மத்திய அரசு உயா்த்தி உள்ளது.

இந்நிலையில், வாக்குறுதி அளித்தபடி, கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்குவதற்காக தமிழக அரசு தற்போது ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டப்படி, ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.532-ஐ மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 69.11 லட்சம் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்க வேண்டியுள்ள நிலையில், அவா்கள் அனைவருக்கும் வேலை வழங்குவதற்காக ஒரு நாளைக்கு ரூ.367.68 கோடி தேவைப்படும். கூடுதலாக 25 நாள் வேலைவாய்ப்பை தமிழக அரசுதான் வழங்குகிறது என்பதால், அதற்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசுதான் ஏற்கவேண்டும்.

அதன்படி, ஒரு நாளைக்கு ரூ.367.68 கோடி வீதம் 25 நாள்களுக்கு வேலை வழங்க குறைந்தது ரூ.9,192 கோடி தேவைப்படும். ஆனால், தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.100 கோடியைக் கொண்டு, ஒரே ஒரு நாளைக்குக் கூட வேலை வழங்க முடியாது. எனவே, மத்திய அரசிடம் பேச்சு நடத்தி மாநில அரசுக்கான நிதியை உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.