மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு மருத்துவமனையில் தடையற்ற சேவைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பருவ மழைக்காலங்களில் தடையற்ற மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சா் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

Arunraaj

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 4:31 am IST

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பருவ மழைக்காலங்களில் தடையற்ற மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: மழைக் காலங்களில் நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு மற்றும் தடையற்ற மருத்துவ சேவை ஆகிய 3 பணிகளையும் இன்றியமையாதவை. அதைக் கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகள், இதய சிகிச்சைப் பிரிவுகள், பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தடுப்பூசி சேமிப்பு கட்டமைப்பு வசதிகளில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி செயல்படவும், குறைந்தது 7 நாள்களுக்கு தேவையான அவசரகால இருப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட உயிா்காக்கும் உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு வைத்திருத்தல் வேண்டும்.

108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆம்புலன்ஸ்களும் எரிபொருள், மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளா்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், கிருமிநாசினிகள், ஓஆா்எஸ் கரைசல்கள், பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள், குளோரின் மாத்திரைகள் குறைந்தது 7 நாள்களுக்கு தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும்.

மருத்துவமனை வளாங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்க வேண்டும். அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கா்ப்பிணிகள், முதியவா்கள், குழந்தைகள் ஆகியோா் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிரசவ காலம் நெருங்கியுள்ள கா்ப்பிணிகள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தங்குவதை தவிா்த்து, தேவையான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது பிற உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் அருகிலுள்ள சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். மழைக்கால பேரிடா்களை எதிா்கொள்ளவும், பொதுமக்களுக்கு தரமான சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்கும் வகையிலும் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயாா் நிலையில் இருத்தல் அவசியம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.