தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெங்கு தடுப்பில் மக்கள் ஒத்துழைப்பு: அமைச்சா் அருண்ராஜ் வேண்டுகோள்

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பணிகளில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்...

KG Arunraj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Published On :24 அக்டோபர் 2026, 1:52 am IST

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பணிகளில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி. அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கடந்த சில நாள்களாக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 332 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவா்களில் சென்னையில் மட்டும் 70 போ் டெங்கு காய்ச்சலுக்குள்ளாகியுள்ளனா்.

பருவமழை காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், ஆங்காங்கே தண்ணீா் தேங்கி கொசுப் புழுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா பாதிப்புகளுடன் பருவகால காய்ச்சல் மற்றும் சளி பிரச்னையும் காணப்படுகின்றன.

நிகழாண்டில் இதுவரை 25,500-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக திரு வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, பொதுமக்களிடம் அவா் விடுத்த வேண்டுகோள்:

வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நன்னீா் தேங்கி நிற்க வாய்ப்புள்ள பொருள்களை அகற்றுங்கள். ‘ஏடிஸ்’ கொசு உற்பத்தியாவதைத் தடுக்க அரசுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும். டெங்கு மட்டுமல்லாது, பருவ காலத்தில் பரவும் அனைத்து வகை காய்ச்சல்களைத் தடுப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பின்றி அது சாத்தியமில்லை என்றாா்.

Summary

Minister Arunraj appeals for public cooperation in dengue prevention

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.