நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா? - கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ கடும் கண்டனம்!

முதல்வரை இழிவாகப் பேசுவதை ரசித்துச் சிரிப்பதுதான் திமுக தலைவர்களின் அரசியல் பண்பாடா? என கனிமொழி சந்தோஷ் கேள்வி எழுப்பியிருப்பது குறித்து....

கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ - எக்ஸ்

Published On :19 அக்டோபர் 2026, 8:56 pm IST

பாரம்பரியக் கட்சி என்று அழைக்கப்படும் திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா? என கண்டனம் தெரிவித்துள்ள தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், முதல்வரை இழிவாகப் பேசுவதை ரசித்துச் சிரிப்பதுதான் திமுக தலைவர்களின் அரசியல் பண்பாடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கவுண்டம்பாளையம் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

“பாரம்பரியக் கட்சி”என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா?, தமிழக முதல்வரை பொதுமேடையில் ஒருமையில் பேசுவதும், இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பதும், அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் ரசித்துச் சிரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

குறிப்பாக, திமுக கூட்டத்தில் தொண்டர் ஒருவர் முதல்வர் குறித்து அருவருக்கத்தக்கவகையில் இழிவாகப் பேசியபோது, அதனை ரசித்து ஆரவாரம் செய்து நகைப்புக்குள்ளாகியது பொதுவாழ்வில் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நாகரிகம் குறித்த கேள்வியை எழுப்புகிறது. முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது.

ஒரு மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பு வகிப்பவர், இத்தகைய தருணங்களில் கண்ணியத்தையும் பொறுப்புணர்வையும் நிலைநாட்ட வேண்டாமா? முதல்வர் என்ற அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பில் இருப்பவரைப் பற்றிப் தொண்டர் ஒருவர் பேசும்போது குறைந்தபட்ச மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதைத் தனது கட்சியினருக்கு எடுத்துரைக்க வேண்டாமா?

முதல்வர் குறித்து தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து சிரிக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

முதல்வர் குறித்து தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து சிரிக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை மரியாததையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா? அரசியல் தனிநபர் இழிவுபடுத்தலையும் கண்ணியமற்ற பேச்சையும் அரசியல் கொண்டாட்டமாக மாற்றுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல.

திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக, மேயர் பிரியா இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வர் குறித்து தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா?

தமிழ்நாட்டின் முதல்வரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் பாரம்பரியக் கட்சி?

அரசியல் தலைவர்களின் பேச்சும் நடத்தையும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும். பொதுமேடைகளில் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் பேணுவதே அரசியல் நாகரிகத்தின் அடையாளம். இழிவான பேச்சுகளை ரசித்துச் சிரிப்பதால் அரசியல் விவாதத்தின் தரம் உயராது; மாறாக, பொதுவாழ்வின் மாண்பே கேள்விக்குள்ளாகும்.

எனவே, பாரம்பரியக் கட்சி என்று தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் திமுக, முதலில் பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் நிலைநாட்ட வேண்டும்.

அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல.

எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும் என அவர் கூறியுள்ளார்.

Is this the political civilization of DMK? - Kanimozhi Santosh MLA strongly condemns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.