மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மருதமலை கோயில் படிப்பாதையில் அருவி போல் பெருக்கெடுத்த மழை நீர்!

மருதமலையில் அருவி போல் கொட்டிய கன மழை பற்றி...

Marudhamalai Temple

மருதமலை கோயில் படிப்பாதை - video crop

Published On :17 அக்டோபர் 2026, 4:50 pm IST

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மருதமலை மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் பெய்த கன மழையால் சுப்பிரமணிய சுவாமி கோயில் படிப்பாதையில் மழைநீர் அருவி போல் பெருக்கெடுத்து ஓடியது.

மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தத் திடீர் கனமழையின் காரணமாக, மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. தேங்கிய நீர், மலையிலிருந்து வடிந்து வரத் தொடங்கியதை அடுத்து, கோயிலின் பிரதான ராஜகோபுரப் படிக்கட்டுப் பாதையில் அருவி போல் ஆர்ப்பரித்து வழிந்தோடியது.

படிக்கட்டுகளில் வெள்ளம்போல் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மலை இறங்க வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். பாதுகாப்பு கருதிப் பக்தர்கள் அனைவரும் கோயில் மண்டபங்களிலேயே காத்து நின்றனர். பின்னர் மழை நீரின் அளவு குறைந்த பிறகே அவர்கள் பாதுகாப்பாக மலை இறங்கிச் சென்றனர். மருதமலை மட்டுமின்றி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, ​தொண்டாமுத்தூர், ​பேரூர், ​ஆலாந்துறை, ​சாடிவயல் ​உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்தது.

இதனால் விவசாயத் தோட்டங்கள், மேடான பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளிலிருந்து அடித்து வரப்பட்ட மழைநீர் பிரதான சாலைகளில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ​கோவையில் தொடர்ந்து பெய்து வரும் இந்தத் தீவிர மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.