
தீபாவளியன்று மழை பெய்யுமா? வெளியான புதிய தகவல்!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த சுற்று மழை எப்போது?

மழை - கோப்புப்படம்
முரசு புயல் இன்று (நவ. 3) அதிகாலை தீவிர புயலாக கரையைக் கடந்த நிலையில், சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது என்பது குறித்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான முரசு புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஒங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று (நவ. 3) அதிகாலை கரையைக் கடந்தது.
இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், படிப்படியாக புயலாக வலுவிழந்து, இன்று நள்ளிரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வானிலை நிலவரங்களை அவ்வப்போது, சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
”முரசு புயல், ஆந்திர மாநிலம் ஒங்கோல் அருகே கரையைக் கடந்த நிலையில், இதன் தாக்கத்தால் மழைமேகக் கூட்டங்கள் உருவாகி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த சுற்று மழை நவ. 6 முதல் 8 ஆம் வரை இயல்பான பருவ மழை பெய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.
நவ. 8 ஆம் தேதி தீபாவளி திருநாள் என்பதால் பட்டாசு வெடிப்போருக்கு பருவ மழை இடையூறாக இருக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Summary
As Cyclone 'Murasu' crossed the coast as a severe cyclonic storm early this morning (Nov 3), private weather forecaster Pradeep John has provided information regarding when the next spell of rain can be expected in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







