மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தலைமைத் தேர்தல் ஆணையரே மோசடி பேர்வழி என்பது அம்பலமாகியுள்ளது: பெ. சண்முகம்

எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

cpim sfi

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். - கோப்புப் படம்

Published On :12 அக்டோபர் 2026, 7:35 pm IST

எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் நடைமுறையில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிஜேபி சார்பில் தில்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் என பலரையும் காவல்துறை கைது செய்தனர்.

போராட்டத்தை ஒருங்கிணைத்த சிஜேபியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே உள்பட முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற்ற உச்சநீதிமன்றத்தை நோக்கிய பேரணியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், எஸ்ஐஆர் தொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முதலில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் மோசடி செய்தார்கள். பிறகு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி மோசடி செய்தார்கள்.

தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையரே மோசடி பேர்வழி என்பது அம்பலமாகி இருக்கிறது. ஆனாலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நம்பச் சொல்கிறார்கள்? ஜனநாயகம் காப்போம்! வாக்குரிமை காக்க களம் காண்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

CPI(M) State Secretary P. Shanmugam has commented on the SIR issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.