மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி

மாணவர்கள் குரல் என்ற தலைப்பில் சென்னை தீவுத்திடலில் மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடியது பற்றி...

Attack on Tamil language and culture: Rahul Gandhi

ராகுல் காந்தி

Published On :10 அக்டோபர் 2026, 8:39 pm IST

தமிழ் கலாசாரம், மொழி மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாணவர்கள் குரல் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னை தீவுத்திடலில் மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் 10,000 கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வரும்போது ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன். ஒருவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் அப்படியே பின்பற்றாதீர்கள். மாணவர்கள் பகுத்தறிந்து, தாங்கள் விரும்பும் வழியில் செயல்படுங்கள். தமிழ்நாட்டில் இரு பெரும் ஆளுமைகள் திருவள்ளுவர், பெரியார்.

உங்கள் கலை, வரலாறு, மண், பாரம்பரியம் உள்ளிட்டவற்றைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியை திணிப்போம் என வெளிப்படையாக கூறியவர்தான் அமித் ஷா. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைகிறது.

தொகுதி மறுவரையறை வந்தால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் செய்துவிடும். புதிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் ரூ 3,300 கோடியை விடுவிப்போம் என்கிறது பாஜக அரசு. தமிழ் கலாசாரம், மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது ழுமு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தமிழ் கலாசாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். கேள்வி கேட்கும் உரிமையையும் வாக்களிக்கும் உரிமையையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் கொண்டு வந்த ‘நீட் ஒழிப்பு' பதாகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.

Summary

Rahul Gandhi has accused that an attack is being carried out on Tamil culture and language.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.