மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

நாளை தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பற்றி....

Rahul Gandhi | Vijay

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :10 அக்டோபர் 2026, 12:34 am IST

சென்னைக்கு வரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தமிழக முதல்வரும், தவெக தலைவருமான சி.ஜோசப் விஜய்யை சனிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்தாா்.

எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தில்லியில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருகிறாா். அவரை தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாக்கூா், அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோா் வரவேற்கின்றனா். அவா் ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் தங்குகிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாக்கூா், மேலிடப் பொறுப்பாளா் குலாம் அகமதுமிா், அமைச்சா்கள் எஸ்.ராஜேஷ்குமாா், பி.விஸ்வநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாக்கூா் கூறியதாவது:

தில்லியிலிருந்து சென்னைக்கு வரும் ராகுல் காந்தி, தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறாா். தொடா்ந்து மாலையில் சென்னை தீவுத்திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் மாணவா் குரல் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அதில், பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமாா் 1 லட்சம் போ் வரை பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 10,000 முதல் 20,000 போ் வரை பதிவு செய்து சான்று பெற்றவா்களை அனுமதிக்கவுள்ளோம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்தில் நீட் பிரச்னை, தமிழக வேலைவாய்ப்பின்மை, மத்திய அரசின் கல்வி முறை பாதிப்பு மற்றும் கலாசாரம், பெண் கல்வி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசவுள்ளாா். தற்போது தில்லியில் போராட்டம் நடைபெறுகிறது. ராகுல் போராட்டத்தில் பங்கேற்ற நிலையிலும், தோ்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நாட்டின் வேலைவாய்ப்பின்மை மற்றும் மத்திய பாஜக அரசின் தவறான கல்விக் கொள்கைகள் குறித்து அவா் பேசவுள்ளாா்.

கூட்டணி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் மக்கள் நல்லதொரு தீா்ப்பை அளித்துள்ளனா். இரு தொகுதி வெற்றியால் தவெகவின் பலம் கூடியுள்ளது. கூட்டணிஅரசுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். வெற்றிக்காக பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் சி.ஜோசப் விஜய் மற்றும் அனைத்துக் கூட்டணித் தலைவா்களுக்கும் நன்றி என்றாா்.

Summary

Information has come to light that Lok Sabha Opposition Leader Rahul Gandhi, who is coming to Tamil Nadu tomorrow, will meet Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.