மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக அபார வெற்றி - நேரலை உடனுக்குடன்!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து...

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.

Published On :9 அக்டோபர் 2026, 11:06 pm IST
7:47 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் சத்தியபாமா, திமுக சாா்பில் சுகன்யா, அதிமுக சாா்பில் க.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் களத்தில் இருந்தனா்.

7:47 am, 9 அக்டோபர் 2026

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, 23 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.

8:16 am, 9 அக்டோபர் 2026

தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!

தவெகவின் சத்தியபாமா 72 வாக்குகளும், திமுகவின் சுகன்யா 68 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 56 வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர்.

9:43 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல்! 2ஆம் சுற்றில் முன்னிலைக்கு வந்த அதிமுக!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க முன்னிலைக்கு வந்துள்ளது.

9:47 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல் முதல் சுற்று 1.

சத்தியபாமா (த.வெ.க.) - 2634 2. பானுமதி (அதிமுக) - 2639 3. சுகன்யா (திமுக) - 2019 4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 168 5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 70 வாக்கு வித்தியாசம்.5 வாக்குகள் அதிமுக முன்னிலை

9:47 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல் 2வது சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 4981

2. பானுமதி (அதிமுக) - 5573

3. சுகன்யா (திமுக) - 4016

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 352

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 107

வாக்கு வித்தியாசம்.592 வாக்குகள் அதிமுக முன்னிலை

10:28 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல்! 810 வாக்குகள் வித்தியாசம்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

10:50 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல்! 958 வாக்குகள் வித்தியாசம்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

10:50 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் மீண்டும் மாறிய நிலவரம்! சத்யபாமா முன்னிலை!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென நிலவரம் மாறியது. தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைக்கு வந்தார்.

10:57 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல் 5 சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 13213

2. பானுமதி (அதிமுக) - 12,489

3. சுகன்யா (திமுக) - 11,554

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 898

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 260

வாக்கு வித்தியாசம் 724 வாக்குகள் த.வெ.க. முன்னிலை

11:02 am, 9 அக்டோபர் 2026

தவெக முன்னிலை

தாராபுரம் இடைதேர்தல் 6ஆவது சுற்றில் தவெக1394 வாக்குகள் முன்னிலை

11:48 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைதேர்தல் 9ஆவது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா 2112 வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலையில் உள்ளார்.

12:03 pm, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல் 10வது சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 27,649

2. பானுமதி (அதிமுக) - 23,521

3. சுகன்யா (திமுக) - 22,503

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 2,156

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 509

வாக்கு வித்தியாசம்.4,128 வாக்குகள் த.வெ.க முன்னிலை

1:36 pm, 9 அக்டோபர் 2026

தாராபுரத்தில் தவெக முன்னிலை! 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலை...

5:37 pm, 9 அக்டோபர் 2026

விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்: அமைச்சர் செங்கோட்டையன்

விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சத்தியபாமா | சுகன்யா | பானுமதி | கார்த்திகா

சத்தியபாமா | சுகன்யா | பானுமதி | கார்த்திகா

5:49 pm, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக அபார வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.