மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி!

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.

Published On :9 அக்டோபர் 2026, 7:36 pm IST

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த அக். 6-ஆம் தேதி நடைபெற்றது. 320 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு வருகிறது. தாராபுரம் இடைத்தேர்தலின் 23 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) வீழ்த்தினார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார்.

தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்

  • சத்தியபாமா (தவெக) – 66,841 வாக்குகள்

  • சுகன்யா (திமுக) – 57,370 வாக்குகள்

  • பானுமதி (அதிமுக) – 45,280 வாக்குகள்

  • கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) – 5,268 வாக்குகள்

  • லட்சுமணன் (சிபிஐ) – 1,157 வாக்குகள்

Summary

Tamizhaga Vettri Kazhagam candidate Sathyabhama has registered a massive victory in the Dharapuram Assembly constituency by-election.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.