மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு...

cm vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :8 அக்டோபர் 2026, 3:40 pm IST

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில், 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரித்தார். விஜய் தரப்பில், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை என வாதிடப்பட்டது.

தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், தகவல்களை மறைத்தது, வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் வாங்கியுள்ளதாகக் கூறியுள்ள 50 செண்ட் நிலம், வருவாய் துறை ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு நிலம் என தினேஷ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

வேட்புமனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல, ஊழல் நடவடிக்கை. விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்த முடியாது. தேர்தல் வழக்கில்தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், ஆக்கிரமிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதில் தகுதி இழப்பு ஏற்படுகிறதா? வில்பட்டி நிலம் தொடர்பாக விஜய், விற்பனை பத்திரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளாரே எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தினேஷ் தரப்பில், வருவாய் துறை ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக விளக்கமளித்தார்.

முதல்வர் விஜய் தரப்பில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. விஜய் வசதிபடைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, சொத்தை மறைத்ததாகக் கூறி, அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும்? என வாதிடப்பட்டது.

தினேஷின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, அந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.

Summary

Election Case: Verdict on petition filed by Chief Minister Vijay reserved

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.