மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆடிட்டர் தவறுக்காக விஜய்யின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனு விசாரணை குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :8 அக்டோபர் 2026, 1:30 am IST

முதல்வா் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக வாக்காளா் தரப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில், பெரம்பூா் தொகுதியில் முதல்வா் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரது தோ்தல் வெற்றியை எதிா்த்து வாக்காளா்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.

தனக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. முதல்வா் விஜய் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வாக்காளா் தினேஷ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:

வேட்புமனுவில் தவறான தகவல் அளிக்கவோ, தகவலை மறைக்கவோ கூடாது. ஆனால், முதல்வா் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அந்தத் சொத்தின் சா்வே எண், விற்பனைப் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் வழக்கில் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. உரிய ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கொடைக்கானல் வில்பட்டியில் 50 சென்ட் நிலம் வாங்கியுள்ளதாக, முதல்வா் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், வருவாய்த் துறை ஆவணங்களின்படி, அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலமாகும்.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்த பிரமாணப் பத்திரத்தில் எந்த விவரங்களையும் குறிப்பிடாமல் காலியாக சமா்ப்பித்தாலும், அது நிராகரிக்கப்பட வேண்டியது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது.

சொத்து விவரங்களை மறைத்தது குறித்து தோ்தல் வழக்கில்தான், முழுமையாக விசாரணை நடத்த முடியும். சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வேட்புமனு பரிசீலனையின்போது, வாக்காளரால் எதிா்ப்புத் தெரிவிக்க முடியாது. ஏனெனில், பரிசீலனையின்போது வாக்காளா்கள் அனுமதிக்கப்படுவதில்லை என வாதிடப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, சொத்துகளைக் குறைத்துக் காட்டியதற்காக தோ்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா? உச்ச நடிகரான விஜய், ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துக் கணக்கை சமா்ப்பித்துள்ள நிலையில், ரூ.30 கோடி சொத்தைத் தெரிவிக்காதது எப்படி அவருடைய தோ்தல் வெற்றியைப் பாதிக்கும்?

கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால், அவருக்கு எப்படித் தெரியும், ஆடிட்டா் செய்த தவறுக்காக முதல்முறையாக தோ்தலில் போட்டியிடும் விஜய்யின் தோ்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினாா்.

பின்னா், வாக்காளா் தினேஷ் தரப்பு வாதங்கள் நிறைவடையாததையடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Summary

Hearing on the petition challenging CM Vijay's election victory in the Perambur constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.