மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளது குறித்து...

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :5 அக்டோபர் 2026, 7:09 pm IST

தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் திங்கள்கிழமை (அக். 5) கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வர் ஜோசப் விஜய், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மீனவர்களையும், 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த அக். 5 அன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகையும் (பதிவு எண்: IND-TN-10-MM-0457) பறிமுதல் செய்துள்ளனர் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது தமிழ்நாட்டின் கடலோர மீனவச் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், இராமநாதபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், பாரம்பரியமாகவே பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித் தொழிலைச் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பேணி வருகிறார்கள் என்றும், குறிப்பாக, மீன்பிடிப்படகுகளே அவர்களின் முதன்மையான வாழ்வாதாரமாக விளங்குவதால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அவர்களது குடும்பங்களுக்குப் பெருந்துயரத்தையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைந்து மீட்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும் என்றும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கான தற்போதைய அதிகாரப்பூர்வ அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி விவகாரங்கள் தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவை உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாகக் கூட்டி, இருநாட்டு மீனவர்களின் பிரச்னைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 எனவே, இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் உடனடியாகக் கொண்டு சென்று, தற்போது இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ள 20 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளை மீட்டுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களை அக்கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Vijay wrote a letter to the Central Government on Monday (Oct. 5), urging it to take the necessary steps to secure the release of Tamil Nadu fishermen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.