டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்

தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்பவராக ஜோசியர்தான் இருப்பதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து...

M.K. Stalin

மு.க. ஸ்டாலின் - எக்ஸ்

Published On :4 நவம்பர் 2026, 8:48 pm IST

தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்பவராக ஜோசியர்தான் இருப்பதாகவும், முதல்வர் விஜய்யை ஆட்டிப்படைத்துதான் ஆட்சி நடப்பதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கோவை வ.உ.சி பூங்காவில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடந்துவரும் குற்றங்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''தமிழகத்தில் அடுக்கடுக்காக பல்வேறு குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால், பரிகார பூஜை செய்துகொண்டு இருக்கிறார் முதல்வர் விஜய்.

அழுத்த அழுத்தத்தான் திமுக மேலே எழுவோம். அதுதான் திமுகவின் டிஎன்ஏ. தவெக ஆட்சியின் அவலங்களை மறைக்க அடிக்கடி ரெய்டு நடத்தப்படுகிறது. திமுகவுக்கு பின்வாங்கிய வரலாறே இல்லை.

லாக்கப் மரணங்கள் குறித்து வாய் திறந்தாரா? பத்திரிகையாளர்களைக் கண்டாலே வாய் திறக்க அஞ்சுகிறார். மக்களின் எந்தவொரு கேள்விக்கும் பதில் கூறாமல் இருக்க முடியாது. பதில் கூற வேண்டியது அவரின் கடமை. நன்றாக ரிஹர்சல் பார்த்துவிட்டு வேன் மீது ஏறி பேசிவிட்டு போனால் மட்டும் போதாது.

அவர் வாயில் வரும் ஒரே வார்த்தை, திமுக... திமுக... திமுக... சினிமா நடிக்கும்போது, சிஎம் சார் ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். சக நடிகர்கள்மீது அவதூறு பேசி ஜெயித்துவிடுவார். அதே ஃபார்முலாவில் அரசியலிலும் ஜெயித்துவிட்டார்.

மின் கட்டண உயர்வால் நடுத்தர மக்கள் கூடுதலாக செலவு செய்யும் கஷ்டத்தில் இருக்கின்றனர்.

அரிசி, காய்கறி வாங்க மக்களால் முடியவில்லை. அவர்களின் கண்ணீர் இந்த ஆட்சியை முடித்துவைக்கும்.

இயற்கை பேரிடர் வந்தால் மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுவார்கள். தவெக ஆட்சியில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்தான். கொலையும் வன்முறையுமாக மாறியுள்ளது தமிழ்நாடு. இதுதான் தவெக ஆட்சி கொண்டுவந்த மாற்றமா?'' எனக் குறிப்பிட்டார்.

Summary

In a TVK government, it is the astrologer who will decide everything M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.