தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய்க்கு என்னுடைய மதிப்பெண் பூஜ்ஜியம்தான்: மு.க. ஸ்டாலின்

தவெக அரசை விமர்சித்து மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:09 pm IST

தவெக அரசை விமர்சித்து முதல்வர் விஜய்க்கு பூஜ்ஜிய மதிப்பெண் வழங்குவதாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாட்டில் தவெக ஆட்சி வர வேண்டும் என விரும்பி வாக்களித்தவர்கள், இந்த ஆட்சி எப்போது ஒழியும் என நினைக்கும் நிலை போய்க் கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகள், சிறைக் கைதிகள் தப்பியோடும் நிலை என பல்வேறு பிரச்னைகள் குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் புகார் அளிக்கின்றனர்.

சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதுடன், சமீபமாக காணாமல்போய்க் கொண்டிருக்கின்றனர்.

சினிமாவில் ஹீரோவாக நடித்தவர் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக செயல்படுவார் என நம்பி வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோட்-சூட் அணிந்துகொண்டு ஏதோ அலுவலகப் பணிக்கு வருவதைப் போல நாள்தோறும் காலை 9 மணிக்கு வந்துவிட்டு மாலை 5 மணிக்கு வீட்டுக்குச் சென்று விடுகிறார். முதல்வருக்கு என்னுடைய மதிப்பெண்ணாக பூஜ்ஜியம்தான் நான் அளிப்பேன்.

அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். நாங்கள் குற்றவாளி இல்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம். நாங்கள் நெருக்கடி நிலைமையைப் பார்த்தவர்கள், மிசா சட்டத்தைப் பார்த்தவர்கள், தடா சட்டத்தைப் பார்த்தவர்கள். இதெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமே கிடையாது. சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

Summary

MK Stalin has criticized the TVK government, giving CM Vijay a score of zero

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.