மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்சம் கொடுக்க முன்வந்தவர் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? பெ. சண்முகம் கேள்வி!

அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையான நிலையில் அதுதொடர்பாக பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்

Published On :2 நவம்பர் 2026, 5:56 pm IST

அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையான நிலையில் அதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நேற்று (நவ. 1) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இயல், இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு ஒருவர் ரூ.5 கோடி கொடுப்பதாக சொன்னதாகக் குறிப்பிட்டு, அதனை தான் மறுத்துவிட்டதாகதத் தெரிவித்திருந்தார்.

அவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தது யாரென அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல மறுப்பது ஏன்? என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

சம்பந்தப்பட்ட நபர் யார் என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது சமூக ஊடகப் பதிவில், “இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யார் அவர் என்பதையும், ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசிய விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

Why was no legal action taken against the person who offered a bribe? asks Pe. Shanmugam!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.