மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரு திருடர்கள் சேர்ந்து விஜய் தொடரக் கூடாது என திட்டம் தீட்டுகின்றனர்: தவெக எம்எல்ஏ முஸ்தபா

திமுக, அதிமுக இரு கட்சிகளும் சேர்ந்து தவெக ஆட்சி வரக் கூடாது என திட்டம் தீட்டுவதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா குற்றம் சாட்டியது குறித்து...

MK Stalin | Vijay | Edappadi Palaniswami

மு.க. ஸ்டாலின் | விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 11:06 am IST

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து தவெக ஆட்சி வரக் கூடாது என திட்டம் தீட்டுவதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா பேசியதாவது, "ஒரு நல்லாட்சியைக் கெடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். திமுகவை எதிர்த்து எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஆட்சி செய்தனர்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை எடப்பாடி பழனிசாமி என்ற திருடரும் திமுக திருடர்களும் கூட்டணி சேர்ந்து இந்த (தவெக) ஆட்சி வரக் கூடாது என திட்டம் தீட்டுகின்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுக நன்றாக இருந்தது. ஆனால், 10 முறை தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை முகவரி எழுதிவிட்டார்.

எந்தக் கூட்டணியும் இல்லாமல் தவெக ஆட்சியமைத்தோம். ஆனால், திமுகவினர் 35 கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர். அறிவாலயத்துக்கு தண்ணீர் கேன் கொண்டு செல்பவர்களைக்கூட கூட்டணி வைத்துக்கொள்ள அழைத்தனர். எந்தக் கூட்டணியும் வைக்காமல், முதல்வர் விஜய் ஆட்சியமைத்தார்.

ஒருவர் எப்போதும் பூஜ்ஜியத்திலேயே இருப்பார். அவரின் வாக்குகளை எண்ணினார்களா என்பதுகூட தெரியவில்லை. நாம் தமிழர் கட்சி என்ற இயக்கத்தை அவர் நடத்தி வருகிறார் (சீமான்). அவர் பொது வேட்பாளர் என்று கூறப்படுகிறது. அவருக்கு அந்தத் தகுதி இருக்கிறதா? நீங்கள் எல்லோரும் இப்போது ஒன்றுசேர்ந்து, நாகரிகமற்ற அரசியலைச் செய்து வருகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

Summary

DMK and AIADMK are conspiring to prevent a TVK government from coming to power, says MLA Mustafa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.