மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெக

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என இனி வரும் காலங்களில் மக்கள் பேசுவார்கள் என தவெக விமர்சித்துள்ளது குறித்து...

People will say that DMK is the source of corruption TVK

தவெக

Published On :26 அக்டோபர் 2026, 7:23 pm IST

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என இனி வரும் காலங்களில் மக்கள் பேசுவார்கள் என தவெக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக தவெக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாங்கள்தான் ஆலமரம்… யார் ஆண்டாலும் நாங்கள்தான் ஆளும் கட்சி" என்று ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை இன்று கிழிகிறதா?

ஒருபுறம், பள்ளி மாணவர்களின் கல்வியுடன் தொடர்புடைய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் அன்பில் மகேஸ் கைது! மறுபுறம், அரசு வேலைக்காகப் பல ஆண்டுகள் இரவு பகல் பாராமல் படிக்கும் இளைஞர்களின் கனவுகளைப் பணத்திற்காகச் சிதைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறுஆய்வு மனு தள்ளுபடி!

மாணவர்களின் கல்வியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளையும் கூட ஊழலுக்கான வேட்டைக்காடாக மாற்றிவிட்டு, உத்தமர் வேடம் போடுவதற்குக் கூசவில்லையா?

"கொள்கைதான் உயிர்" என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் இந்தக் கட்சியின் வரலாறு!

ஆறே மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்று ஏறும் கல்யாண மேடைகளிலெல்லாம் மைக் பிடித்துப் புலம்பும் மு.க. ஸ்டாலினே, இனி வரும் காலங்களில், திமுக ஒரு தீயசக்தி மட்டுமல்ல, ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேசுவார்கள்! அதற்கும் சேர்த்து புலம்பித் தள்ளுங்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

Summary

People will say that DMK is the source of corruption TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.