தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி: அமைச்சா் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டுக்கென தனியாக மாநிலக் கொடி உருவாக்கப்பட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வேண்டுகோள்.

Aadhav Arjuna

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:31 am IST

தமிழ்நாட்டுக்கென தனியாக மாநிலக் கொடி உருவாக்கப்பட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வேண்டுகோள் விடுத்தாா்.

விழாவில் அவா் பேசியதாவது: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கென தனிக் கொடிகள் உள்ளன. அதேபோன்று, தமிழின் பெருமையையும், தமிழகத்தின் அடையாளத்தையும் பறைசாற்றும் வகையில் தமிழ்நாட்டுக்கென தனிக் கொடி உருவாக்க வேண்டும்.

அந்தக் கொடியை நவம்பா் 1-ஆம் தேதி மற்றும் ஜூலை 18-ஆம் தேதி முதல்வா் தனது கரங்களால் ஏற்ற வேண்டும். தேசியக் கொடிக்கு இணையாகத் தமிழின் பெருமையைப் போற்றும் வகையில் அந்த கொடி உருவாக்கப்பட வேண்டும். தில்லியில் இருந்து எத்தகைய அழுத்தம் வந்தாலும் எங்களது கொள்கை வழியில் உறுதியாக நிற்போம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.