தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னையில் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து மக்கள் வெளியேற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியது குறித்து...

Aadhav Arjuna

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 4:31 pm IST

சென்னையில் மழை நேரங்களில் மிகவும் மோசமான பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து அரசு கொடுக்கும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "சென்னையில் வருகிற நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரையில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுவாக மழையின் அளவு அதிகரிக்கும்போது அம்பத்தூர், கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் வரையில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒட்டுமொத்த வட சென்னைக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

40 - 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட குடியிருப்பு வாரியம் மற்றும் குடிசை மாற்று வசதி வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. இவர்களையெல்லாம் மழை நேரங்களில் வேறிடத்துக்கு அழைத்துச் செல்ல ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், 40 - 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகளை இடித்து புதிதாகக் கட்டப்பட வேண்டும்.

அப்பகுதிகளில் வசிப்போர் வேறிடத்துக்குச் செல்ல மறுக்கின்றனர். அவர்கள் கொஞ்ச காலம் வேறிடத்துக்குச் செல்வதுடன், அரசுக்கு அவகாசம் அளித்தால் மட்டுமே அதே இடத்தில் புதிய வீடுகள் கட்ட முடியும். இதற்கான உத்தரவாதமும் கொடுக்கிறோம்.

கடந்த 10 - 15 ஆண்டுகளாக குடிசை மாற்று வாரிய வீடுகளையும் குடியிருப்பு வாரிய வீடுகளையும் முன்னாள் அமைச்சர்கள் யாரும் ஆய்வு செய்யவில்லை.

சென்னையில் பல இடங்களில் வாழவே முடியாத சூழ்நிலையில் வீடுகள் இருக்கின்றன. இங்கிருப்பவர்களெல்லாம் வேறிடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சி அலுவலரிடமும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம்.

ஒரே இடத்தில் இருக்கும் உணர்வை விடுத்து, பாதுகாப்பு இல்லாத இடத்தைவிட்டு, அரசு கொடுக்கும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். 2 ஆண்டுகள் பொறுத்துக் கொண்டால் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்" என்று தெரிவித்தார்.

Summary

Minister Aadhav Arjuna advises people in Chennai to move out of unsafe areas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.