தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அன்பில் மகேஸ் கைது: அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை - ஆதவ் அர்ஜுனா

அனைத்து நடவடிக்கைகளும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து...

 Adhav Arjuna

ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்

Published On :27 அக்டோபர் 2026, 9:31 pm IST

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (அக். 27) தெரிவித்தார்.

மேலும், அவர் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னையில் இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

''மீடியா பின்புலம் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் முதல்வராகியுள்ளார் விஜய். ஆனால், திமுக அப்படி இல்லை. இலவசம் முக்கியமில்லை, தரம்தான் முக்கியம் என முதல்வர் கூறுகிறார். சத்துணவில் கடந்த ஆட்சியில் எந்த அளவுக்கு தரம் இருந்தது என்பது பலருக்கும் தெரியும்.

பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தில் நிரூபித்துதான் ஆக வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளையடித்து தேர்தலின்போது பணம் கொடுக்கிறது திமுக.

இடைத்தேர்தலில் காசு கொடுக்காமல் தவெக வெற்றி பெற்றுள்ளது. பண அரசியலை முன்னிறுத்தி கொள்கையை பெயரளவில் மட்டுமே திமுக வைத்துள்ளது. எ.வ. வேலு, செந்தில் பாலாஜிக்கு அண்ணாவை பற்றியோ, பெரியாரைப் பற்றியோ தெரியுமா?

அனைத்துத் துறைகளிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இது பழிவாங்கும் அரசியல் அல்ல. வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். அதன்படி செயல்படுகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Arrest of Anbil Mahesh No political vendetta Adhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.