ஷ்யாம் சீனிவாசன் எழுதிய'பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (வியாழன்) நடைபெற்றது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் இந்நூலை வெளியிட்டார்.
தி ஃபெடரல் பேங்க் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ஷ்யாம் சீனிவாசன் 'பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்'(Better Never Stops) என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளன. ஒரு பகுதி அவரது அனுபவங்களின் நினைவுத் தொகுப்பாகவும் இதர பகுதி நடைமுறைக்கு ஏதுவான தலைமைத்துவ சிந்தனைகளாகவும் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், சிட்டி பேங்க் மற்றும் ஃபெடரல் வங்கி போன்ற நிறுவனங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றவர் ஷ்யாம் சீனிவாசன்.
இந்நூல் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும் நாடு முழுவதும் முன்னணி புத்தக விற்பனைக் கடைகளிலும் இந்நூலை வாங்கிக்கொள்ளலாம்.
சென்னையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் மிதுன் சசேட்டி (இணை நிறுவனர், காரட்லேன்), கோபால் சீனிவாசன் (தலைவர், டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ்), லட்சுமி நாராயணன் (முன்னாள் தலைமைச் செயல் அலுவலர், காக்னிசன்ட்), கே. மகாலிங்கம் (டிஎஸ்எம் குழுமம்), டிடி. சீனிவாஸ் ராகவன் ( நிர்வாக இயக்குநர், சுந்தரம் ஃபைனான்ஸ்) உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யவன்ஷியிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறு: கபில் தேவ்

மொழியியல் வரலாறு

‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீடு

மெய்ப்பொருள்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

