மெய்ப்பொருள்-பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக். 234; ரூ. 120; வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2814 4995.
அண்டத்தில் உறைந்திருக்கும் இறைவனை அறியவோ, காணவோ, உணரவோ நம்மால் இயலாது. நமக்கு அதற்குரிய ஆற்றல் இல்லை. எனவே, அருளாளர்கள் அனைவரும் மெய்ப்பொருளை நாம் அறிந்து அடைந்து கொள்வதற்காக, மிக எளிதாக காட்ட முயன்றனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இதைத்தான் சித்தர் பாடல்கள், இறையருளாளர்களின் செய்யுள்கள் துணை கொண்டு நமக்குப் புரிய வைக்கிறார் நூலாசிரியர்.
நமது குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை நாம் அறிந்த புராணங்கள், இறை நம்பிக்கைகள் குறித்த கேள்விகள் பல இருக்கின்றன. அவை எழுப்பப்படுவதையே தெய்வ நிந்தனையாகச் சொல்லப்பட்டு வந்தன. அந்த மனத் தடையை உடைத்தெறிந்து கேள்விகளே இனி இல்லை என்கிற புதிய வெளிச்சத்தை நம்முள் பாய்ச்சுகிறது இந்நூல்.
நம் உடம்புக்குள்ளே அந்த மெய்ப்பொருள் மறைவாக வைக்கப்பட்டுள்ளது; ஒளி வீசிக் கொண்டிருக்கும் அந்த அறிவு மாணிக்கத்தை, அந்த சூட்சுமத்தை அறிந்து கொள்வதென்பது பெரிய ரகசியம் அல்ல; நீ தேடும் பொருள் உன்னுள் இருக்கிறது; அந்த பூட்டி வைக்கப்பட்ட பெட்டகத்தைத் திறக்கும் திறவுகோல் குருவின் வார்த்தையில் இருக்கிறது என குருவருளின் அற்புதம் விளக்கப்பட்டிருக்கிறது.
உபநிடதங்களும், சடங்குகளும், வழிபாட்டு முறைகளும், மந்திர உச்சாடனங்களும் ஒவ்வொரு படிநிலை. எல்லா ஆறுகளும் கடலை நோக்கியே செல்கின்றன என்பதைப்போல எல்லா வழிமுறைகளும் அந்த ஏக இறைப் பேராற்றல் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் என்பதை அகத்தியர், தாயுமானவர், மெய்வழிச் சாலை ஆண்டவர் உள்ளிட்டோரின் பாடல்கள் மூலம் எடுத்துரைக்கிறது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு





