மொழியியல் வரலாறு - பேராசிரியர் ப. மணிமாறன்; பக். 344; ரூ. 420; தனம் பதிப்பகம், சிதம்பரம்- 608 002, ✆ 97868 60861.
மனித கண்டுபிடிப்புகளில் சிறந்ததாக 5 விஷயங்களை வகைப்படுத்தும் அறிவியலாளர்கள், முதலாவது இடத்தில் மொழியையே சொல்லியுள்ளனர். மனித உற்பத்திப் பொருள்களுக்கெல்லாம் தாயாக விளங்குவது மொழியே ஆகும்.
அறிவியல் வளர்ச்சியானது இன்று பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோலவே, மொழியியலும் அபரிமிதமான வளர்ச்சி கண்டிருப்பதைக் கண்கூடாக காண்கிறோம். இலக்கணம், மொழிக் கற்றல், கற்பித்தல், அகராதியியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தி, தனி ஒரு துறையாக வளர்ந்து, இன்று கணினி துறைக்கு ஒரு முக்கிய பங்களிப்பை மொழியியல் வழங்கி வருகிறது.
மனிதன் சிந்திக்க கற்றுக் கொண்ட காலம் தொட்டு மொழியியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஐரோப்பா கண்டம் தொடங்கி, ஆசிய கண்டம், இந்திய துணைக் கண்டம் வரையிலும் மொழி குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொழியியல் துறை வளர்ச்சிக்கு பல்வேறு பகுதிகளைச் சார்ந்தோர் பங்களிப்பைச் செய்துள்ளனர். கிரேக்கர், ரோமானியர், அரேபியர், இந்தியாவைச் சேர்ந்தவர்களும் மிகுந்த பங்களிப்பை நல்கி உள்ளனர். இந்த நூல், மொழியியல் வளர்ச்சியை அறிவியல்பூர்வமாக நிறுவுகிறது.
மொழியியல் வரலாற்றை முற்காலம், இடைக்காலம், தற்காலம் என மூன்று பகுதிகளாகப் பிரித்து, மொழியியல் வளர்ச்சி தொடர்பான கருத்துகளைத் தெளிவாக, எளிய நடையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழி தொடர்பாக நடைபெற்ற ஆய்வுகளை விரிவாக விளக்குகிறது. கற்க -கற்பிக்க சிறந்ததொரு பாடநூலாக உள்ளது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிக்மண்ட் ஃபிராய்ட் - வாழ்வும் உளவியலும்

கருத்து மலர்கள்

முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு

மெய்ப்பொருள்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

