தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கு சொல்லப்படும் காரணங்களை ஏற்க முடியாது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதனால், பாதிக்கப்படும் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அன்றாட நிகழ்வுகளாகி வருகிறது. ஆனால், தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை என்றும், சில தனி மனிதா்கள் செய்யும் சதியாலும், மின் கருவிகளின் பழுதாலும்தான் மின்தடை ஏற்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
எத்தனை தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றைக் கடந்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டியது அரசின் கடமை. எனவே, காரணங்களைக் கூறுவதை விடுத்து மின்வெட்டை முற்றிலுமாகத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
சென்னையில் ஃபியூஸ் கேரியர் திருட்டால் மின்வெட்டு: 2 பேர் கைது!

தோ்தல் தோல்வி: அன்புமணி ராமதாஸ் கருத்துக்கேட்பு

ஒசூரில் அடிக்கடி மின்வெட்டு: தொழிற்துறையினா் புகாா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

