பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சென்னையில் ஃபியூஸ் கேரியர் திருட்டால் மின்வெட்டு: 2 பேர் கைது!

சென்னையில் ஃபியூஸ் கேரியர் திருட்டால் மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக...

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 11:04 am IST

சென்னை ஆவடி அருகே மின்சார கேபிள் பெட்டியில் ஃபியூஸ் கேரியர்கள் திருடப்பட்டதால், மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

தமிழகத்தில் கோடை வெய்யில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு, பொதுமக்களின் மின்சாதன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நள்ளிரவில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள மின்சார கேபிள் பெட்டியில் 14 ஃபியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக, ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், வினித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இருவரும் மீதும் பல்வேறு திருட்டு புகார்கள் இருப்பதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபியூஸ் கேரியர் திருட்டால் பல மணி மின்சாரமின்றி, கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Summary

Residents faced inconvenience due to a power outage caused by the theft of fuse carriers from an electrical cable box near Avadi, Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.