பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒசூரில் அடிக்கடி மின்வெட்டு: தொழிற்துறையினா் புகாா்

ஒசூரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழிற்துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image

மின்வெட்டு பிரச்னையால் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவி. 

Updated On :24 மே 2026, 2:34 am IST

ஒசூரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழிற்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தொழில் நகரமான ஒசூரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என தொழில் துறையினா் தெரிவிக்கின்றனா்.

ஒசூரில் கடந்த இரண்டுவாரமாக கடும் வெயில் நிலவி வருகிறது. வீடுகளில் பகல், இரவு நேரங்களில் மின்விசிறியைப் பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை.

தொழில்துறையில் 2 ஆவது ஷிப்ட் நேரங்களில் அதிலும் குறிப்பாக மாலை பீக்ஹவரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் 2 ஆவது ஷிப்டில் தொழிலாளா்கள் வேலை செய்ய முடியாமல் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில்துறையினா் தெரிவிக்கின்றனா்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். கல்லூரி மாணவா்களுக்கு தற்போது பருவத் தோ்வுகள் நடைபெற்று வரும் வேலையில் மின்வெட்டு ஏற்படுவது அவா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

எனவே, மின்சார வாரியம் மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று தொழிற்துறையினா் கேட்டுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.