பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

கோவையில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல்

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 12:41 pm IST

கோவையில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை முதல்வர் விஜய், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிறுமியை சித்ரவதை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையானவற்றை செய்து தருவதாகவும் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, சிறுமியின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரண உதவி வழங்க பரிந்துரைப்பதாக சூலூர் எம்எல்ஏ சுகுமார் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Summary

CM Vijay Offers Consolation to the Family of the Girl Sexually Assaulted and Murdered in Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.