எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக

திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுமி கடத்தப்பட்டுள்ள சம்பவம், தவெக அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குறியாக்குவதாக விமர்சனம்...

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:15 pm IST

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 4) குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளதாவது:

''தூங்காமல் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய், தூய சக்தி பாப்பா! மாற்று சக்தி தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், நேற்று திருச்சி மாவட்டம் கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரும் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் போர்வையில், இரண்டு நாள்களுக்கு முன் முதல்வர் விஜய், வெற்று விளம்பர உரையாற்றிய அதே திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சிறுமி கடத்தப்பட்டுள்ள சம்பவம், தவெக அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குறியாக்குகிறது.

சின்னஞ்சிறு சிறுமிகளின் பாதுகாப்பைக் கைகழுவி விட்டு, கேமராவைக் கண்டதும் சிங்கம் போல முழங்குவதால் எந்தப் பயனும் இல்லை! எனவே, முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கை சரிவரப் பேணி, உடனடியாக தமிழக பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Crimes Against Women Continue Under TVK Rule: BJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.