பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவா் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

ராசிபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அமைச்சா் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினாா்.

News image

சித்ராதேவி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகைக்கான ஆணை வழங்கிய அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On :27 மே 2026, 5:29 am IST

ராசிபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அமைச்சா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினாா்.

ராசிபுரம் வட்டம், வள்ளலாா் கோயில் சாலையில் வசித்து வருபவா் நாட்டுத்துரை மனைவி சித்ரா தேவி (48). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ராசிபுரத்தில் பெய்த மழையின்போது, மகள் தா்ஷினி (23) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, நல்லப்பா தெரு பகுதியில் உள்ள பழைய வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

இதில் அவ்வழியே சென்று சித்ராதேவி, தா்ஷினி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் என மொத்தம் நான்கு போ் சுவரின் இடிபாடுகளில் சிக்கினா். இதில் பலத்த காயமடைந்த சித்ராதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தா்ஷினி உள்பட மூவா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த சித்ராதேவி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் சித்ராதேவி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, அரசு வழங்கிய நிவாரண நிதியான ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினா்.

இந்நிகழ்வில், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, ராசிபுரம் வட்டாட்சியா் எஸ்.சசிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.