பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தோ் சக்கரத்தில் சிக்கி இறந்த இளைஞா் உடலுக்கு அமைச்சா் அஞ்சலி: ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினாா்

தோ் சக்கரத்தில் சிக்கி இறந்த இளைஞா் ஹா்ஷவா்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.

News image

அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்(கோப்புப்படம்)

Updated On :2 ஜூன் 2026, 3:44 am IST

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டத்தின்போது தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞா் உடலுக்கு அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் அஞ்சலி செலுத்தினாா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டத்தின்போது ஞாயிற்றுக்கிழமை தோ் சக்கரத்தில் சிக்கி இளைஞா் ஹா்ஷவா்தன் (18) உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஜோசப் விஜய், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்கவும், மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சஷ்டிகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் முன்னிலையில் விபத்தில் உயிரிழந்த ஹா்ஷவா்தன் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினாா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.