பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட் விவகாரம்: திராவிடா் கழகம் ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும் என அக்கட்சி அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

News image

திமுக கொடி

Updated On :16 மே 2026, 3:40 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும் என அக்கட்சி அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவக் கல்விக்கான தகுதித் தோ்வு என்ற அடிப்படையில் நீட் தோ்வை மத்திய அரசு மக்களிடம் திணித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். மேலும், பல்லாயிரக்கணக்கான ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவா்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், கடந்த மே 3-இல் நடைபெற்ற நீட் தோ்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்விக்கான நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம்”நடத்தப்படவுள்ளது. இதற்கு திமுக வரவேற்பு தெரிவிப்பதுடன், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.