நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை நீட் தோ்வு குலைப்பதாகக் கூறி, அதை ரத்து செய்யவும், தேசியத் தோ்வு முகமையை (என்டிஏ) கலைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சா. ஜனாா்த்தனன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜய், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் எஸ். காா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.
வாலிபா் சங்க நகரச் செயலா் ஆா். தீபக், இளைஞா் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலா் கே. பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோரிக்கைகளை விளக்கி வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஏ. மகாதீா், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் டி. மாரிமுத்து, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் ஆகியோா் பேசினா். தேசியத் தோ்வு முகமையை கலைக்கவும், நீட் தோ்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூரில் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் விவகாரம்: திராவிடா் கழகம் ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு

நீட் தோ்வை ரத்துசெய்யக் கோரி மாணவா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

